கேரள மாநிலத்திலிருந்து வரலாற்று ரூபாயில் மதிப்பிலான சந்தன கட்டைகளை கடத்திக்கொண்டு திருச்சியை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட கோவை மாவட்டம் போத்தனூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேசிஸ் உதயகுமார் தலைமையிலான காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடிப்பதற்காக கோவை மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்..
காவல்துறையினர் மிகவும் விழிப்புடன் இருந்த சூழ்நிலையிலும், காவல்துறையினருக்கு தெரியாமல் எப்படியோ அவர்களுடைய கண்களில் மண்ணை தூவி, அங்கிருந்து அந்த கடத்தல் லாரி சென்று விட்டது. அதன் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூர் மார்க்கமாக திருச்சியை நோக்கி அந்த கடத்த லாரி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் தான், காவல்துறையினர் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதாவது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கின்ற அழகாபுரம் பகுதியில் அந்த லாரி வந்தபோது, அந்த லாரியை பின்தொடர்ந்து வந்த தனிப்படை காவல்துறையினர், அந்த லாரியை முந்தி சென்று வழிமறித்தனர்.
அப்போது திடீரென்று லாரியிலிருந்து குதித்து அந்த லாரியின் ஓட்டுனர் தப்பிச் சென்றார். ஆனாலும் காவல்துறையினர் விடாமல் அவரை பின்துடர்ந்து துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். இதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்து ஆத்தூர் ஊரக காவல் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், இந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பதும், லாரியில் சுமார் ஒரு டன் மதிப்புள்ள சந்தன கட்டைகள் கடத்திவரப்பட்டதும் தெரிய வந்தது. அதன் மூலமாக காவல்துறையினர் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்து கோவை மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.