முற்காலத்தில் நவதானிய உணவுகளையும், உடலுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சத்துக்களையும் வழங்கும் இயற்கையான உணவுகளை நாம் எடுத்துக் கொண்டோம். ஆனால், தற்போது அப்படி அல்ல, துரித உணவுகள் என்று சொல்லப்படும் பல்வேறு இன்னல்களை உடலுக்கு ஏற்படுத்தும் உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம்.
அதன் காரணமாக தான், இன்று நமக்கு பல்வேறு நோய்கள் வந்து சேருகின்றன. அதில் ஒரு முக்கிய பாதிப்பு தான் கல்லீரல் செயல் இழப்பது.
தற்போது இந்த கல்லீரல் செயலிழந்து விட்டது. என்பதை அறிந்து கொள்வதற்கான சில அறிகுறிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லீரல் பாதிப்புக்கு உல்லாவதற்கு முதல் காரணம் மதுப்பழக்கம் தான் என்று கூறப்படுகிறது.
அதனை தவிர்த்து ஒரு சில அறிகுறிகள் மூலமாக கல்லீரல் செயல் இழந்து விட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, கல்லீரல் இரத்தத்தை சுத்தம் செய்யாமல் இருந்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.
அப்படி இரத்தம் சுத்தம் செய்யப்படாமல் இருந்தால், சிலருக்கு தோல் அரிப்பு உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது. சில நபர்களுக்கு அவர்களுடைய கண்கள் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். அதுவே பிற்காலத்தில், ஒரு நபருக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
அதேபோல சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால் அவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல, கல்லீரல் செயல்படாமல் போனாலும், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அப்படிப்பட்டவர்களுக்கு செரிமான கோளாறு இருக்கும். இதன் காரணமாக, அவர்களுக்கு உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இங்கே சொல்லப்பட்டிருக்கும் அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவருக்கு நிச்சயமாக கல்லீரல் பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.