fbpx

ஐயோ எல்லாம் என்னால்தான், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி….! கதறி துடித்த கணவன், கடைசியில் என்ன செய்தார் தெரியுமா….?

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அவருடைய கணவர், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி அருகே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற அப்பிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர், தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்களே ஆகும் நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான், நேற்று நள்ளிரவு நேரத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பிரபாகர், தன்னால் தான் மனைவி தற்கொலை செய்து கொண்டாரோ, என்ற குற்ற உணர்வு காரணமாக, மனைவி தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், தானும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தான், இன்று காலை இருவரும் உயிரிழந்த நிலையில் கிடப்பதை பார்த்த அவர்களுடைய மகள், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம், இதுபற்றி கூறியதால், காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, காவல்துறையினர் விரைந்து வந்து, இருவரின் உடலையும் கைப்பற்றி, தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு, இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

சூப்பர் வசதி..!! ’இனி பணம் எடுக்க ஏடிஎம் போக தேவையில்லை’..!! ’இ-சேவை மையங்களே போதும்’..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

Tue Aug 29 , 2023
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இ-சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து பணம் எடுக்கும் வகையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கிக் கணக்கில் இருந்து இ-சேவை மையங்களில் பணம் எடுக்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் இ-சேவை மையம் செயல்பட்டு […]

You May Like