fbpx

நடத்தையில் சந்தேகம்.. கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்த கணவன்..!! போலீசுக்கு போன் செய்துவிட்டு எஸ்கேப்..

மனைவி தகாத உறவில் இருந்ததால், கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவருக்கு பரமேஸ்வரி (26) என்ற மனைவியும் 8 மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று கோபால் ராஜ் தனது மனைவியை கழுத்து நெறித்து தானே கொலை செய்து விட்டதாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார்.

போலீசாரிடம் கோபால் ராஜ் கூறுகையில், “என் மனைவி பரமேஸ்வரிக்கு பலருடன் தகாத உறவு இருந்தது. பலமுறை கண்டித்தும் தனது மனைவியின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாததால் மனைவி பரமேஸ்வரியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். மேலும் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைவதாக தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் பரமேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரண மேற்கொண்டனர். தகவல் தெரிவித்த கணவன் காவல்துறை தன்னை அடித்து துன்புறுத்தி விடுவார்களோ என பயந்து காவல் நிலையத்தில் சரண் அடையாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்போன் டவர் உதவியுடன், கோபால் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more ; Tn Govt: கலைஞர் கைவினைத் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் வரை 25 சதவீதம் மானியம்…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

English Summary

Husband arrested for strangling wife for not giving up adultery

Next Post

தினம் ரூ.29 போதுமே, ரூ.4 லட்சம் அள்ளலாம்.. பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு பாலிசி

Sun Dec 8 , 2024
This scheme is called LIC Aadhaar Sheela scheme. Women between the age group of 8 to 55 years can invest in this scheme.

You May Like