திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ள ஒரநந்தபாடி கிராமத்தில் பழனி என்பவர் தனது மனைவி வள்ளியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.பழனி தினந்தோறும் கூலி வேலை செய்து குடும்பத்தை கவணித்து வருகிறார்.
தம்பதிகளுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று தம்பதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரிக்கவே ஆத்திரத்தில் இருந்த பழனி தனது மனைவி மற்றும் குழந்தைகள் நான்கு பேரையும் வெட்டிக் கொன்றுள்ளார்.
அத்துடன் அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து படுக்காயங்களுடன் மீட்க்கப்பட்ட பழனியின் 9 வயது மகளான பூமிகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.