சட்டப் பேரவையில் யாரை, எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. வரும் பிப்ரவரி 20-ம் தேதி மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. சட்டப் பேரவையில் யாரை, எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு; பேரவையில் இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை என அப்பாவு தெரிவித்துள்ளார். கலைஞருக்கு முதுமையின் காரணமாக முன்வரிசையில் இடம் கேட்ட போது, அதற்கான அவசியம் இல்லை என அப்போதைய சபாநாயகர் தனபால் மறுத்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக தனபால் என்னிடம் கேட்டபோது, நான் அவரிடம், பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னத்திற்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களை அரசியலமைப்பு சட்டப்படி நீங்கள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை நீங்கள் செய்தீர்களா என்று கேட்டேன். அவர்கள் எதிர்கட்சி துணை தலைவராக உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் இருக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஆனால் நீதிமன்ற உத்தரவு சட்டப் பேரவையையோ, சட்டப் பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது என கூறினார்.