கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..
தமிழ்நாடு அரசு பணியில் சேரும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் என ஒவ்வொரு பணியாளர்களும், சுமார் 43 நாட்கள் அடிப்படை பயிற்சியினை பெற வேண்டும். இதற்காக 1974 ஆம் ஆண்டு அரசு பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டது. இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்..
சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அமைச்சர்; பணி நியமனம் செய்யும்போதே சிறப்பு காலமுறை ஊதியத்தில்தான் பணி நியமனம் செய்துள்ளனர். வருவாய்த் துறையில் மட்டும் அல்ல, மற்ற துறைகளிலும் இதே நிலைதான். முதல்வரிடம் பேசி காலமுறை ஊதியமாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதுவரை கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது இல்லை. 10 நாட்களுக்கு முன்பாக கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றார்.