சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திருவாக்கவுண்டனூரில் பூபதி மற்றும் சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 1 ஆம் தேதி அன்று எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரண்யா கண்ணன் என்பவருடன் சிலநாட்களாக வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் சரண்யாவை அழைத்து கணவருடன் வாழுமாறு அறிவுறை கூறி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சரண்யா அதனை மறுத்து கண்ணன் உடனேயே சென்றுள்ளார்.
சரண்யா கண்ணனுடன் சென்ற நிலையில் பூபதி, கண்ணனை அழைத்து சமாதானம் பேச அழைத்துள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்து மது அருந்தி நிலையில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பூபதி , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனை வெட்டி இருக்கிறார். மேலும் படுகாயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பூபதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.