ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது..
தமிழகத்தில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு மையங்களுக்காக அதிக நேரம் பயணம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. எனவே தேர்வு மையங்களுக்குக்காக நீண்ட நேரம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது..
அதன்படி, ஒரு மாணவர் 10 அல்லது 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத அதிகபட்சமாக 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊரக பகுதிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை 8.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.. இதற்காக தமிழகம் முழுவதும் 3,200 தேர்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் 10 லட்சம் மாணவர்களுக்கு 4,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன..