fbpx

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை முதல் புதிய முறை அமல்..

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும், தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர்.

’இனி ஆசிரியர்களின் வருகைப் பதிவு இப்படித்தான் இருக்கும்’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

அதனால், நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மே மாதம் ஆசிரியர்கள் தங்களது மொபைல் போனில் உள்ள பள்ளி கல்வித்துறை செயலி மூலம் விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி மூலம் விடுப்புகளுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றை ஆசிரியர்கள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த செயலியானது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் போனில் TNSED-Schools என டைப் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த செயலியை பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்துமாறு மாவட்ட கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. மேலும் பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதன்படி நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.

Maha

Next Post

நேபாளத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி...

Sun Jul 31 , 2022
நேபாளத்தின் காத்மாண்டுவில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 147 கிமீ தொலைவில் கோட்டாங் மாவட்டத்தின் மார்டிம் பிர்டாவைச் சுற்றி காலை 8.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் கிழக்கு நேபாளத்தில் 10 கிமீ தொலைவில் கண்காணிக்கப்பட்டது, இது 27.14 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் […]

You May Like