fbpx

பெற்றோர்களே உஷார்… தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி 8 வயது சிறுமி பலி.!! – பகீர் சம்பவம்

கேரளாவில் 9 வயதே ஆன சிறுமி வீட்டில் நூடுல்ஸ் சாப்பிடும் போது எதிர்பாராத விதமாக அது தொண்டையில் சிக்கியதில், 9 வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நூடுல்ஸ் அந்த சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் அந்த சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அவரது பெற்றோர் அடிமாலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமிக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அந்த சிறுமி அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி நூடுல்ஸ் சாப்பிடும் போது அது சிறுமியின் தொண்டை அல்லது மூச்சுக் குழாயில் சிக்கியிருக்கலாம் என்றும் இது அந்த சிறுமி மூச்சு விடுவதைத் தடுத்து மரணத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சிறுமியின் உடல் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அனுப்பப்பட்டது. உயிரிழந்த அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கவனம் : வீட்டில் குழந்தை இருந்தால் அவர்கள் சாப்பிடும் போது நாம் எந்தளவுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவதாகவே இந்தச் சம்பவம் இருக்கிறது. குழந்தைகளைப் பொறுமையாகச் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை. சாப்பிடும் போது குழந்தைகளுக்கு எதாவது அசவுகரியம் ஏற்பட்டால், அதை அலட்சியம் செய்யலாம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

English Summary

In Kerala, a 9-year-old girl died of suffocation when she accidentally got stuck in her throat while eating noodles at home.

Next Post

தொடர் மழை எதிரொலி | தமிழகத்தில் செங்கல் விலை திடீர் உயர்வு!! ஒப்பந்ததாரர்கள் ஷாக்..

Fri Jul 5 , 2024
Brick prices have suddenly increased in many parts of Tamil Nadu. The prices of bricks have gone up due to continuous rains in many districts.

You May Like