ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பார்க்க வந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு சிறுமியை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். அதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்து மக்கள் அந்த இளைஞரை கட்டி வைத்து அடித்ததோடு மட்டுமல்லாமல் அவரது வாயில் சிறுநீரும் கழித்திருக்கின்றனர். இது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆறு பேரை கைது செய்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையின் தகவலின் படி பக்கத்து ஊரைச் சார்ந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞர் சிறுமியை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். இதனைப் பார்த்த அந்த கிராம வாசிகள் மற்றும் சிறுமியின் குடும்பத்தார் அந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
இந்த தகவல் அறிந்த அந்த இளைஞரின் கிராமவாசிகள் மற்றும் குடும்பத்தினர் வந்து இளைஞரை விட்டு விடும்படி இவர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். அப்போது இளைஞரை விடுவிப்பதற்கு முன்பாக சில பேர் அந்த இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி உள்ளது. இது தொடர்பாக பேசிய ஜோலார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷவர்தன் அகர்வால்” இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை ஆனால் நாங்களே பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஆறு பேரின் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த சிறுமியின் தரப்பில் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக சமூக அமைதியை கெடுக்கும் வகையில் இது போன்ற வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் யார் என்று தெரியவில்லை எனவும் அவர்களைக் கண்டறிந்து வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த பிறகு பிறகு தான் உண்மையான நிலவரம் என்ன என்று தெரியும் எனவும் கூறினார். தற்போது சமூக அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.