fbpx

அதிரடி உத்தரவு…! வரும் கல்வி ஆண்டில், 75 % பயிற்சியை ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும்…!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சி அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்த பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சியானது, மாவட்ட, மாநில அளவில் சில பயிற்சி மையங்களில் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. பயிற்சி பெறுவோர், உணவு, உறைவிட வசதிகளுக்காக, மையங்களில் இருந்து நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது.

பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் செல்வதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, இனி நேரடி பயிற்சி வழங்காமல், அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்தப்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டில், 75 சதவீத பயிற்சிகளை, ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

புற்றுநோய் உண்டாக்கும் பஞ்சு மிட்டாய்...! தமிழகத்திலும் விற்பனை செய்ய தடையா...? அமைச்சர் முக்கிய தகவல்...

Sun Feb 11 , 2024
புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட வடஇந்தியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்கப்படுகின்றன. பஞ்சு மிட்டாய்களில் […]

You May Like