fbpx

அதிகாலையில் பயங்கரம்…. ஆட்டோவில் சென்ற பெண் கொடூரமாக வெட்டி படுகொலை! தடுக்க முயன்ற ஓட்டுநர் மீதும் சரமாரி தாக்குதல்

கோவில்பட்டி அருகே அதிகாலை ஆட்டோவில் சென்ற பெண்ணை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது . இந்தக் கொலையை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் தலையில் சராசரியாக வெட்டு விழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வாணரம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சண்முகராஜ் 33 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவர் தனது ஆட்டோவில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை சவாரிக்கு ஏற்றிக்கொண்டு வானரமுட்டியிலிருந்து கட்டராங்குளத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் . அப்போது இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் காட்டுப்பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவை வழிமறித்து அந்தப் பெண்ணை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனைத் தடுக்கும் முயன்ற ஆற்றல் ஓட்டுநருக்கும் பயங்கரமாக வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர் பலத்த காயத்தால் மயக்கம் அடைந்துள்ளார்.

மயக்கம் தெளிந்து சுயநினைவிற்கு திரும்பிய பின் சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். அவரது தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது காவல்துறை. அந்தப் பெண்ணை கொலை செய்த மருமக நபர்கள் யார் என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்பது தொடர்பாக தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

செல்போனை பறித்த ஆசிரியருக்கு மைக் டைசன் ஸ்டைலில் குத்துவிட்ட மாணவர்! அதிர்ச்சி சம்பவம்!

Mon Apr 10 , 2023
அமெரிக்காவைச் சார்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது வகுப்பு ஆசிரியரின் முகத்தில் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பொதுவாகவே எல்லா நாடுகளிலும் மாணவர்களுக்கு பன்னி மற்றும் கல்லூரி வளாகங்களிலும் வகுப்பறைகளிலும் கைப்பேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தடை அமெரிக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இருந்து வருகிறது . இந்நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் […]

You May Like