fbpx

ரெட் அலர்ட்… இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

கனமழை காரணமாக நாகை மயிலாடுதுறை, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு 940 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது.

இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 880 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 1050 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது வானிலை மையம்.

இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று இரண்டு மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாவட்ட காரைக்கால் பகுதி பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

In which districts are schools and colleges closed today?

Vignesh

Next Post

ட்ரெயின் மிஸ் பண்ணிட்டீங்களா?  போர்டிங் ஸ்டேஷனை ஆன்லைனில் ஈஸியா மாற்றலாம்..!! எப்படி தெரியுமா?

Tue Nov 26 , 2024
You can change boarding station online even after booking ticket, here's how

You May Like