fbpx

‘பற்களை விற்று கோடிகளில் சம்பாத்யம்’ – ஜப்பான் மருத்துவர் சிக்கியது எப்படி!

கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் ஒருவர் வித்தியாச நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார். என்னவென்றால், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்று வந்துள்ளார்.  10 ஆண்டுகளாக வெற்றிகரமாக திருடி வந்தவர் தற்போது சிக்கியது எப்படி . வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த நபர், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் எளிதாக அனைத்து அறைக்குள்ளும் சென்று வரும் வசதி அவருக்கு இருந்தது. ஒரு அறையில் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறுசுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பற்களை கடந்த 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் திருடி விற்று பணம் சம்பாதித்துள்ளார்.

இதன் மூலம் 10 ஆண்டுகளில் அவர் பணக்காரராகவும் மாறியுள்ளார். இதிலிருந்து அவர் சுமார் 30 மில்லியன் யென் சம்பாதித்திள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் 1 கோடியே 63 லட்சம் ரூபாயாகும். 10 ஆண்டுகளாக திருடியவர் மாட்டியது எப்படி என்றால் பழைய பற்களை மட்டும் திருடி வந்தவருக்கு பேராசை ஏற்பட்டு புதிய பற்களை திருடி விற்றுள்ளார். பற்கள் காணாமல் போவதை கண்டறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளது. அதனுடன் கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் செய்து வரும் திருட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Read more ; Credit Cards : இந்த 5 கிரெடிட் கார்டுகளில் ஒன்று இருந்தா போதும்.. அடிக்கடி ஊரு சுற்றலாம்!! எப்படி தெரியுமா?

Next Post

256 km தூரம்... 'வளைவே இல்லாமல் நேராக செல்லும் ஹைவே!' எங்க இருக்கு தெரியுமா?

Fri May 31 , 2024
256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நீண்ட நேரான நெடுஞ்சாலை என்ற பெயரை பெற்றுள்ளது. தொலை தூர பயணங்களுக்கு செல்லும் போது அடிக்கடி வளைந்து செல்லும் சாலைகள் என்றால் வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சில கிலோமீட்டர் தாண்டினாலே சாலைகள் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருக்கும். மேலும் பள்ளம் மேடு என்று […]

You May Like