fbpx

அடக்கடவுளே… ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…? மத்திய சுகாதாரத்துறை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 10,725 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 36 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 94,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,43,78,920 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,37,57,385 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,448 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,10,82,34,347 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23,50,665 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இந்திய ராணுவத்தை தாக்க ரூ.30,000 கொடுத்த பாக். ராணுவ அதிகாரி.. பிடிபட்ட பயங்கரவாதி வெளியிட்ட பகீர் தகவல்..

Thu Aug 25 , 2022
இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் ரூ.30,000 பணம் கொடுத்ததாக காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதி தெரிவித்துள்ளார்.. கடந்த 21-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியின் நவ்ஷேரா செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்டர் நடைபெற்றது.. இந்த எண்கவுண்ட்டரில் தபாரக் உசேன் என்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டார்.. இந்நிலையில், தபாரக் உசேன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். […]

You May Like