fbpx

நாட்டில் 5,108 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு… 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,108 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 31 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,675 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,04,949 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,36,092 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,216 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,15,67,06,574 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,25,881 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’இளவரசியிடம் Sorry சொல்லி விடுகிறேன்’..! ஆதித்த கரிகாலனின் அழைப்பை மறுத்த வந்தியத்தேவன்..!

Wed Sep 14 , 2022
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்.30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு தற்போது புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அண்மையில் சென்னையில் நடந்த ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கையில், பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள நடிகர் விக்ரம் நேற்று ட்விட்டரில் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வரவிருப்பதாக பதிவிட்டிருந்தார். அதில், […]
’இளவரசியிடம் Sorry சொல்லி விடுகிறேன்’..! ஆதித்த கரிகாலனின் அழைப்பை மறுத்த வந்தியத்தேவன்..!

You May Like