fbpx

24 மணி நேரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு….? மத்திய அரசு தகவல்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,334 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,44,076 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,91,906 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,977 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,56,41,807 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,864 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

விஜய், ரஜினி படங்களின் கலை இயக்குநர் திடீர் மரணம்..!! சோகத்தில் திரையுலகம்..!! பிரபலங்கள் இரங்கல்..!!

Mon Oct 24 , 2022
விஜயின் சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றிய சந்தானம் மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் T.சந்தானம்.  இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதேபோல் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி வெற்றியடைந்த சர்கார், ரஜினிகாந்த் நடித்த தர்பார் உள்ளிட்ட படங்களிலும் இவர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஏ.ஆர். […]
விஜய், ரஜினி படங்களின் கலை இயக்குநர் திடீர் மரணம்..!! சோகத்தில் திரையுலகம்..!! பிரபலங்கள் இரங்கல்..!!

You May Like