fbpx

இந்தியாவில் 16,561 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…! 49 பேர் சிகிச்சைப் பலனின்றி பலி…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,561 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 49 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,431 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,42,23,557 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,35,73,094 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,928 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,072,946,593 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,72,441 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’சுதந்திர தினத்தையொட்டி ஆவின் பால் பாக்கெட்டுகளில் புதிய அப்டேட்’..! - அமைச்சர் நாசர் அறிவிப்பு

Fri Aug 12 , 2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக்கொடி சின்னம் பதித்து விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனியார் பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்தவில்லை என பால் முகவர் பொன்னுசாமி கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”அவர் சங்கத் தலைவரே கிடையாது என்றும் அவர் கேள்வி கேட்க தகுதி இல்லை எனவும் விமர்சித்தார். அவர் தான் […]

You May Like