fbpx

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,866 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 41 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,143 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,39,05,621 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,32,28,670 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,074 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,02,17,66,615 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,82,390 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

உங்கள் பகுதியில் இருக்கும் தகுதியான மருத்துவர்களை கண்டறிய புதிய செயலி அறிமுகம்..!

Mon Jul 25 , 2022
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களைக் கண்டறிய ‘Search for doctor app’ என்ற செயலியை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. Search for doctor app-இல், அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பகுதியை உள்ளீடு செய்து தேடினால், அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். மேலும், மருத்துவர்களின் அனுபவம், எந்த துறையில் வல்லுநர் உள்ளிட்ட தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும். இதனால், அவசரக் காலங்களில் எளிமையாக மருத்துவர்களைக் கண்டறியும்படியாக […]
உங்கள் பகுதியில் இருக்கும் தகுதியான மருத்துவர்களை கண்டறிய புதிய செயலி அறிமுகம்..!

You May Like