fbpx

#Covid 19: 16,167 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு..‌.! உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,167 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 41 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,41,45,732 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,34,99,659 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,730 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,06,56,54,751 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,75,330 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்.. பயணித்த தூரத்திற்கு மட்டுமே இனி சுங்கக் கட்டணம்..

Mon Aug 8 , 2022
சுங்கவரி வசூலிப்பதற்கான புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. தற்போது, ​​ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மற்றொரு சுங்கச்சாவடிக்கு உள்ள முழு தூரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனம் முழுத் தூரத்தையும் பயணிக்காமல், வேறு இடத்தில் பயணத்தை முடித்துக் கொண்டாலும், கட்டணம் முழுமையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு விரைவில் புதிய முறையைத் தொடங்க உள்ளது.. இந்த புதிய முறையின்படி, நெடுஞ்சாலையில் எத்தனை கிலோமீட்டர் வாகனத்தை ஓட்டிச் […]

You May Like