fbpx

இந்தியாவில் மீண்டும் 20 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 19,893 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 53 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,897 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,40,67,144 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,34,24,029 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,530 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,05,22,51,408 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,20,676 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! பிரம்மாண்ட நிகழ்வுகளை வெளியிட ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு..!

Thu Aug 4 , 2022
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நிகழ்வுகளை வெளியிட காட்சி ஊடகம் & ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமால்லபுரத்தில் நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொதுப்பிரிவில் 189 அணிகள் மற்றும் 154 பெண்கள் அணிகளும் பதிவு செய்தனர். போட்டிக்கு மொத்தமாக 187 நாடுகளில் இருந்து பதிவு செய்தனர். ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் […]
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! பிரம்மாண்ட நிகழ்வுகளை வெளியிட ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு..!

You May Like