fbpx

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…? மத்திய சுகாதாரத்துறை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 12,751 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 42 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,412 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,41,74,650 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,35,16,071 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,730 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,06,88,49,775 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,95,034 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு..! வாக்காளர்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!

Tue Aug 9 , 2022
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் 6பி படிவத்தை வாக்காளர்கள் தாமாக முன்வந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. எனவே, வாக்காளர்கள் தாமாக முன்வந்து […]

You May Like