நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் பல வெளியிடப்படுகிறது. அதை பார்த்து, நம்முடைய செய்தி நிறுவனத்தை பின் தொடர்ந்து வருபவர்கள், இதன் மூலமாக பயன் பெற்று, வேலை வாய்ப்பை மிக விரைவில் பெறலாம். ஆகவே நம்முடைய செய்தி நிறுவனத்தைப் பின்தொடர்ந்து, உங்களுக்கான வேலை வாய்ப்பை மிக விரைவில் பெறுங்கள்.
இந்திய ராணுவ பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் இருந்து, தற்போது ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது. இதில், Draughtsman, steno GDE – ||,LDC,MTS பணிக்கான காலியாக இருக்கின்ற இடங்களை நிரப்ப இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு 13 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ போன்றவற்றில், தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது, 18 எனவும், அதிகபட்ச வயது 25 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 18000 முதல், 81,100 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு, விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து சரியான முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாளுக்குள் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதிநாள் முடிவடைந்த பிறகு பெறப்படும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.