இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,076 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,322 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,44,95,359 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,19,264 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,150 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,14,95,36,744 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,81,723 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.