fbpx

தீவிரப் புயலாக வலுப்பெறும் “ரெமல்” களத்தில் இந்திய கடற்படை விமானங்கள்…!

ரெமல் புயலைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணத்தை அதிகரிக்க இந்திய கடற்படை தற்போதுள்ள நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஆயத்த நிலையில் உள்ளது. இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . கிழக்கு கடற்படை தலைமையகத்தால் விரிவான தயார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கடற்படை தலைமையகத்தில் நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் ரெமல், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு மற்றும் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது . மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக நிவாரணம் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்களை இந்திய கடற்படை தயார் செய்துள்ளது. கூடுதலாக, சீ கிங் மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் விமானங்கள் உள்ளிட்ட இந்திய கடற்படை விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

உடனடி உதவிகளை வழங்க சிறப்பு டைவிங் குழுக்கள் கொல்கத்தாவில் தயார்நிலையில் உள்ளன. மேலும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் டைவிங் குழுக்கள் விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் உள்ளன. இரண்டு வெள்ள நிவாரணக் குழுக்கள், நிவாரணம் மற்றும் மருத்துவப் பொருட்களுடன் கொல்கத்தாவில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், விசாகப்பட்டினம் மற்றும் சில்காவிலிருந்து தலா இரண்டு வெள்ள நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

Vignesh

Next Post

இதய அடைப்பு பிரச்னையா? - அப்போ இந்த 5 விதைகளை சாப்பிடுங்க..!

Mon May 27 , 2024
இதய தமனி அடைப்புகளைத் தடுக்கவும் பக்கவாதத்தைத் தடுக்கவும் உதவும் 5 ஆரோக்கியமான விதைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..! இதய நோய்களின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், இந்த நோயைத் தவிர்க்கலாம். உலகில் மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், இதய தமனி நோய்(Coronary Artery Disease) என்று அழைக்கப்படும் கரோனரி தமனி நோய், […]

You May Like