பச்சிளம் குழந்தைகள் அடிக்கடி அழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதை சரியாக புரிந்து கொண்டு குழந்தைகளின் அழுகையை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். அதாவது, குழந்தைக்கு உடலில் பல்வேறு அசைவுகள் ஏற்படுவதன் காரணமாக உண்டாகும் வலியால், குழந்தை அழுவதற்கான வாய்ப்பு உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த மூன்று வார காலங்களிலேயே பெருங்குடல் வலி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அப்படி குழந்தைகளுக்கு பெருங்குடல் வலி ஏற்படுவதன் காரணமாக, குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். பெருங்குடல் வலியானது குழந்தைகளுக்கு நான்கு முதல், ஆறு மாதங்கள் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் குழந்தைகள் முதுகை வளைத்து, வயிற்று தசைகளை இறுக்கி அழுதால், அதற்கு பெருங்குடல் வலி காரணமாக இருக்கலாம். ஆகவே, உடனடியாக மருத்துவரிடம் குழந்தையை காண்பிக்க வேண்டியது அவசியமாகும். அப்படி பெருங்குடல் வலியின் காரணமாக குழந்தை அழுகிறது என்ற அறிகுறி தெரிந்தால், உடனே குழந்தையை நேராக படுக்க வைத்து, குழந்தையின் கால்களை எடுத்து குழந்தையின் அடி வயிற்றில் மென்மையாக வைத்து, தேய்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி தேய்த்து வந்தால், குழந்தையின் உடலில் உள்ள வாயு குறைந்து, மெல்ல, மெல்ல குழந்தையின் அழுகை குறையும் என்று சொல்லப்படுகிறது.