fbpx

இந்தியாவின் கோலி சோடாவுக்கு இவ்வளவு மவுசா?. அமெரிக்கா, ஐரோப்பாவில் தேவை அதிகரிப்பு!

Goli soda: இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவை நாம் மறந்துவிட்டோம். 80, 90 களில் கோலி சோடா மிகவும் பிரபலமானது. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கோலி சோடா இடத்தில் வெளிநாட்டு குளிர்பானங்கள் ஆதிக்கம் செலுத்தின. வெளிநாட்டு பொருட்கள் மீது மோகம் கொண்ட இந்தியர்கள் வெளிநாட்டு பானங்களைச் சார்ந்திருக்கிறார்கள், வெளிநாட்டினர் இப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரம்பரிய கோலி சோடாவை விரும்புகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் இந்திய கோலி சோடாவுக்கு அதிக தேவை உள்ளது.

இந்திய கோலி சோடாவுக்கு தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவில் உற்பத்தி அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்போது கோலி சோடா ஒரு பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் இன்னும் கோலி சோடா அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே உள்ளது. எல்லா கடைகளிலும் கிடைத்த கோலி சோடா இப்போது பெரிய பிராண்ட் உணவகங்களில் கிடைக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் கோலி சோடா அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள் உட்பட சிறிய கடைகளிலும் கிடைக்கிறது.

வெளிநாட்டில் கோலி பாப் சோடா என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் லுலு மார்க்கெட் மூலம் கோலி சோடா விநியோகிக்கப்படுகிறது. மேலும் யுகே, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கும் இப்போது கோலி சோடா அதிக அளவில் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக ஜிஞ்சர் பிளேவர் சோடாவுக்கு அதிக தேவை உள்ளது. கோலி பாப் சோடாவில் பல சுவைகள் உள்ளன.

இந்திய கோலி சோடாவுக்கு அதிக தேவை இருப்பதால், இப்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ளூர் அளவில் கோலி சோடா உற்பத்திகள் தொடங்கப்பட்டுள்ளன. இருந்தும் இந்திய கோலி சோடாவுக்கு தேவை குறையவில்லை. வெளிநாட்டினர் இந்திய பாரம்பரிய உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியா இந்த பாரம்பரிய உணவு, பொருட்களை மறந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஆரோக்கியத்தின் பார்வையில், இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்கள் சிறந்தவை. இப்போது இந்திய பொருட்கள் சர்வதேச சந்தையில் தேவை பெறுவது வர்த்தகத்தை அதிகரிக்கிறது.

Readmore: தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் வந்தால், உடனே வெப்பம் குறைவாக உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும்…!

English Summary

Is India’s Kohli soda so popular? Demand is increasing in America and Europe!

Kokila

Next Post

கண்டித்த சுப்ரீம் கோர்ட்..!! மீண்டும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் செந்தில் பாலாஜி..? வெளியான பரபரப்பு தகவல்

Tue Mar 25 , 2025
It has been reported that Senthil Balaji will resign from his ministerial post again, following the Supreme Court's condemnation.

You May Like