fbpx

ISRO சூப்பர் வாய்ப்பு…! ஆதித்யா எல் 1 விண்கலத்தை நேரில் பார்க்க இன்று 12 மணி முதல் விண்ணப்பம்…!

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் ஆதித்யா எல் 1 விண்கலம், செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதை, பொதுமக்கள் நேரில் காண அனுமதிக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் இணைந்து இதனை உருவாக்கியுள்ளது.

இந்த விண்கலம், இரண்டு வாரங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலம் நான்கு மாதம் பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, ‘எல் 1’ என்ற மையப்புள்ளியில் நிலை நிறுத்தப்படும். ஆதித்யா விண்கலம், எல் 1 என்ற பகுதியிலிருந்து, சூரியனை ஆய்வு செய்யும்.

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சிறப்பம்சங்கள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. புவியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ தொலைவு வரை சென்று சூரியனை ஆய்வு செய்ய உள்ளது

சுமார் 1500 கிலோ எடை, F378 கோடி பட்ஜெட் (அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை), 100 நாட்கள் பயணம் செய்யும். சூரிய மேல் வளிமண்டல இயக்கவியல் பற்றியும், சூரியன் வெப்பத்தை வெளியிடும் இயக்கவியல் குறித்தும் ஆய்வு செய்யும். சூரியனின் காந்தப்புலம் மற்றும் அதன் அளவீடுகள் உள்ளிட்ட பல ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன.

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் ஆதித்யா எல் 1 விண்கலம், செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதை, பொதுமக்கள் நேரில் காண அனுமதிக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. விருப்பமுடையவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற முகவரியில் இன்று பகல் 12 மணி முதல் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நீதிமன்ற தீர்ப்புகள் இனி தமிழில் மொழிபெயர்க்கப்படும்!… ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Tue Aug 29 , 2023
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்துக்கு முதல்கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில, கடந்த 1968 ஜனவரி மாதம், அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோதுதான் வரலாற்று சிறப்புமிக்க ‘இருமொழிகொள்கை’ தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, பல துறைகளிலும் தமிழின் […]

You May Like