fbpx

பெற்றோர்களே கவனம்…! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…! அரசு அறிவிப்பு…!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்திலும் நாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”தொடர் பெரும் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை சரி செய்யும் வகையில் 3-ம் தேதி சனிக்கிழமை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாட அட்டவணை பின்பற்றி செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த மாதிரி இஞ்சியை பயன்படுத்தினால் மட்டும் போதும்...

Fri Dec 2 , 2022
தலைவலி பலவற்றால் ஏற்படுகிறது. அதிலும் ஒற்றை தலைவலியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலை பார்ப்பது, செல்போன் பார்ப்பது மற்றும் காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் ஆகியவற்றில் வேலை செய்வதனாலும் தலைவலி ஏற்படுகிறது. இது மட்டும் அல்ல உடலில் ஏற்படும் அதிக சூட்டினாலும் ஏற்படுகிறது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் காணலாம்.  முதலில் இஞ்சியினை எடுத்துக் கொள்வது சிறந்த பலன் கிடைக்கும். இஞ்சியில் நார்ச்சத்துக்கள், […]

You May Like