fbpx

குஷியான அறிவிப்பு… அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்…! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!

அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்.5-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 மாணவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று திட்டத்தை தமிழக அரசு வருகின்ற 5-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடக்க விழா நிகழ்ச்சியின் பொழுது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதே போல கல்லூரி பயிலும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியின் பொழுது 15 Model Schools, 26 School of Excellence ஆகியவற்றை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்க உள்ளார்.

Vignesh

Next Post

மிகப்பெரிய ஜாக்பாட்...; அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ரூ.4,000 போனஸ் அறிவிப்பு...! ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,000 வழங்கப்படும்...!

Tue Aug 30 , 2022
ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் […]

You May Like