fbpx

மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் இல்லம் தேடிக் கல்வி..!! நீங்களும் இணைய ஆர்வமா? – முழு விவரம் இதோ..

தொற்றுநோய் சூழ்நிலைகளால் உளவியல் சிக்கல்களுடன் கற்றல் இழப்பை சந்தித்த மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களைத் தொடங்கியது. இந்த வகையில் தொடங்கியது தான் இந்த இல்லம் தேடி கல்வித் திட்டம். இத்திட்டங்கள் மூலம், அரசு கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியருக்கு உடற்கல்வி முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் தங்களது கற்றல் நிலைக்கும் கல்வி நிலைக்கும் இடையில் உள்ள இடைவெளியை இந்த திட்டத்தின் மூலம் ஈடு செய்ய முடியும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு இல்லம் தேடி கல்வித் திட்டம்

இத்திட்டம் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் 7:00 மணி வரை பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பார்கள். இருபது மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தின் அடிப்படையில் கல்வி கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற என்னென்ன தகுதி?

ஒரு லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் தமிழ்நாடு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த நபர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க தகுதி உள்ளவர்களாக நியமிக்கப்பட்டனர்.

பட்டம் பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உறுப்பினர்கள் தவிர பெற்றோர்களும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக சேர்ந்து பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இவை மட்டும் அல்லாமல் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களில் சிலர் ஸ்மார்ட் வகுப்புகள், உயர் தொழில்நுட்ப ஆய்வக வல்லுனர்களாக அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எப்படி சேரலாம்?

படித்த இளைஞர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக சேர வேண்டும் என்று விரும்பினால் https://illamthedikalvi.tnschools.gov.in/Welcome என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களது அடிப்படை தகவல்கள், கல்வி சார்ந்த தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். பின்னர் தேர்வு செய்யும் நண்பர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றலாம்.

Read more ; மக்களே..!! செல்போனை இப்படி மட்டும் பயன்படுத்தாதீங்க..!! ரொம்ப ஆபத்து..!!

English Summary

It was brought in with the aim that the children can bridge the gap between their learning level and educational level through the Home Search Education Programme.

Next Post

திடீரென இடிந்து விழுந்த பிரமிடுகள்..!! மிகப்பெரிய இயற்கை பேரழிவு வரப்போகுது..!! எச்சரிக்கும் கிராம மக்கள்..!!

Mon Aug 12 , 2024
The collapse of one of Mexico's twin pyramids is a sign of a major natural disaster, the indigenous people fear.

You May Like