fbpx

குட் நியூஸ்…! களஞ்சியம் செயலியில் ஆசிரியர்கள் சம்பள பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…!

களஞ்சியம் செயலியில் (KALANJIYAM APP) ஆசிரியர்கள் சம்பள பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தமிழக முதல்வர், இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையும், அக்டோபர்-2024 இம்மாதம் 53% அகவிலைப்படியுடன் ஊதியமும் ஒரே தொகையாக அரசு ஊழியர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் வரலாம். களஞ்சியம் செயலியில் (KALANJIYAM APP) அவரவர் சம்பள பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

English Summary

KALANJIYAM APP teachers can download salary list.

Vignesh

Next Post

ரயில் முன்பதிவு முதல் சிலிண்டர் விலை வரை.. இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய விதிகள்..!!

Fri Nov 1 , 2024
From November 1, many new rules will be implemented. See this post about it.

You May Like