fbpx

3 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை.! தாய் மற்றும் தந்தை தற்கொலை.! நெஞ்சை உருக வைக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன.?

கர்நாடக மாநிலத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் உள்ள சதாசிவம் நகரை சேர்ந்தவர் கரிப் சாப்(46) இவரது மனைவி சுமையா(35) இந்த தம்பதியினருக்கு ஹஸீரா முகமது சுபஹான் மற்றும் முகமது முனீர் என்றும் மூன்று குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இவர்கள் அனைவரும் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கரீப் சாப் மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக வீடியோ சாட்சி ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார் கரீப் சாப்.

அந்த வீடியோவில் தனது பக்கத்து வீட்டைச் சார்ந்த கலந்தர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கடன் வாங்கியதாகவும் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் தன்னையும் தனது குடும்பத்தாரையும் மிகவும் கீழ் தனமான முறையில் நடத்தியதாக தெரிவித்திருக்கிறார். இதனால் மனம் உடைந்த அவரும் அவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

"நான் இல்லாத நேரம் அடுத்தவன் கேட்குதா.?" மண்வெட்டியால் ஒரே போடு.! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!

Tue Nov 28 , 2023
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்திர பிரதேசம் மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த சீதாப்பூர் என்ற ஊரில் வசித்து வருபவர்கள் மோதிலால் சௌஹான் மற்றும் ரஜினி தம்பதி. இந்த தம்பதியினருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. […]

You May Like