fbpx

“இளம் தலைமுறையை சீரழிக்கும் ஹூக்கா..” அதிரடி தடை விதித்த கர்நாடக அரசு..!! இதன் சமூக தீமைகள் என்ன.?

ஹூக்கா புகைப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்களைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் ஹூக்கா புகைப்பதைத் தடை செய்வதாக, கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் இளைஞர்களை” பாதுகாப்பதற்காக, “தீவிரமான உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு” ஹூக்கா புகைப்பது தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அனைத்து ஹூக்கா பொருட்கள் மற்றும் அவற்றை புகைக்க பயன்படும் ஷீஷா விற்பனை விற்பனை, கொள்முதல், வெளிப்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக கர்நாடகா அரசு தெரிவித்து இருக்கிறது.

மேலும் இந்த தடையை மீறுபவர்கள் மீது சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் சட்டம் 2003, குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015, விஷத்தன்மையுடைய பொருட்களை வைத்திருத்தல் மற்றும் விற்பனை சட்டம் 2015, உணவு மற்றும் பாதுகாப்பு தர சட்டம் 2006 மற்றும் இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள ஹூக்கா பாரில் ஏற்பட்ட தீ விபத்தை கருத்தில் கொண்டு, தீ பாதுகாப்பு சட்டங்களை ஹூக்கா தடை சட்டத்தோடு இணைத்து இருப்பதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.செப்டம்பர் 2023 இல், மாநில சுகாதார அமைச்சர் கர்நாடக அரசு ஹூக்கா பார்கள் மீதான கட்டுப்பாட்டை ஆலோசித்து வருவதாகவும், புகையிலை நுகர்வுக்கான சட்டப்பூர்வ வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதாகவும் அறிவித்தார்.

ஹூக்கா என்பது ஒரு மூடிய கொள்கலனில் குழாய் போன்ற சாதனத்தின் மூலம் புகையிலையை வாய் வழியாக நுகர்வது ஆகும். இந்தக் கொள்கலன் ஷீஷா என அழைக்கப்படுகிறது. ஹூக்காவை பயன்படுத்துவதால் ஹெர்பெஸ், கோவிட்-19, காசநோய், மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு நோய்கள் பரவுவதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 45 நிமிடங்கள் ஹூக்கா புகைப்பது 100 சிகரெட்டுகளை புகைப்பதைப் போன்றது மற்றும் மனித உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஹூக்கா புகைப்பதால் புகையிலையுடன் நிக்கோட்டின் மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற விஷத்தன்மையுடைய ரசாயனங்கள் மனிதனை அடிமைப்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது.

Next Post

சூது கவ்வும்.! கணவனை ஏமாற்றிய பெண்.! கள்ளக்காதலன் கழுத்தை அறுத்துக் கொலை.!

Tue Feb 13 , 2024
கணவனை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை, கள்ள காதலன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாப்பூர் டவுனை சேர்ந்த சாம்ராஜ் பேட்டையில் தீபா (40) என்பவர் தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள பேக்கரிக்கு தீபா அடிக்கடி சென்று வந்த நிலையில், அங்கு வேலை செய்த திவாகர்(37) […]

You May Like