திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 12 முதல் 15-ம் தேதி வரை 4 நாள்களுக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை தீப திருநாள், 14-ம் தேதி பவுர்ணமி முன்னிட்டு, 12 முதல் 15-ம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து (குறிப்பாக சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களில் இருந்து) திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 12 முதல் 15-ம் தேதி வரை 1,982 பேருந்துகளும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 8,1127 பேருந்துகளும் என மொத்தம் 10,109 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலம் இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.