ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.