fbpx

கரூர் வைசியா வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்…!

கரூர் வைசியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Development Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 400 ரூபாய் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 25.01.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.karurvysyabank.co.in/Careers/docs/BDE_Posting%20Final12.pdf

Vignesh

Next Post

கோவை, மதுரையில் ஜியோவின் 5ஜி சேவை..!! வாடிக்கையாளர்கள் செம குஷி..!!

Tue Jan 10 , 2023
சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவின் 5ஜி சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் நாளை தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 5ஜி இணையச் சேவையை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து மக்களுக்குக் கிடைக்கும் அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுகிறோம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 5ஜி சேவையைப் பிரதமர் மோடி […]

You May Like