fbpx

அரசு பள்ளி ஆசிரியர்களே கவனம்…! கலந்தாய்வுக்குஜூலை 14-ம் தேதி கடைசி நாள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த மே மாதமும், மனமொத்த மாறுதல் சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை எமிஸ் தளம் வழியாக இணையதளத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 9-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு ஜூலை 14-ம் தேதி EIMS தளம் வழியாக நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆசிரியர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

BMW எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!... அறிவிப்பு வந்தாச்சு!... இவ்வளவு கம்மி விலையா?... சிறப்பம்சங்கள் இதோ!

Tue Jul 11 , 2023
பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் CE 02 மின்சார மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ (BMW) ஆனது கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற நிறுவனமாகும். இது ஆடம்பர வாகனங்களுக்கு பெயர் பெற்றது மற்றும் வாகனத் துறையில் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். தற்பொழுது, வளர்ந்து வரும் மின்சார வாகன […]

You May Like