4-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி, புதியதாக பதவி உயர்வில் பணியேற்றுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 1 முதல் 8 மணி வரை, 04.09.2023 முதல் 08.09.2023 தேதி வரை தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதியதாக பதவி உயர்வில் பணியேற்றுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அட்டவணைப்படி பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பயிற்சியில் கலந்து கொள்ளாத பட்சத்தில் இது குறித்து இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு சென்று சார்ந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்கும் புதியதாக பதவி உயர்வில் பணியேற்றுள்ள தலைமை ஆசிரியர்கள் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பயிற்சிக்கு வரும் தலைமை ஆசிரியர்கள், பயிற்சி தொடங்குவதற்கு முதல் நாள் மாலை 5 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் தவறாமல் பயிற்சி மையத்தில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் மட்டுமே பயிற்சிக்கான பதிவு மற்றும் அறைகள் ஒதுக்கீடு ஆகியவை செய்யப்படும்.
பயணப்படிக்கு தேவையான பயணச்சீட்டுகள் மற்றும் தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கு புத்தகத்தின் (Pass Book) முதல் பக்க நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
TNSED School செயலி மற்றும் Google Sheet செயலி ஆகியவற்றை தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். மேலும் தங்கள் பள்ளியைப் பற்றிய Presentation (PPT) கொண்டு வர வேண்டும்.