தேசிய தலைநகரில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து இணைப்பு பணியில் ஈடுபட முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
41 ஆண்டுகளில் இல்லாத அளவாக தலைநகர் டெல்லியில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் இடிந்து விழுந்ததால், நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு விடுமுறையை ரத்து செய்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியை ஒட்டிய குருகிராமில் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்றும் மிக அதிக கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.