fbpx

கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனே கையொப்பமிட வேண்டும்…! அதிரடியாக பறந்த உத்தரவு…!

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் தனது உத்தரவில்; ஆசிரியர்கள் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன்பெற முடியாதவாறு ஒரு சில தலைமை ஆசிரியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து கையொப்பம் இடுவதில்லை என தெரிவித்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டு பார்வையில் காணும் சங்க செயலரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது .

கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இணைவதற்கு தலைமையாசிரியர்கள் இசைவு பெற்று இணைந்துள்ளனர் . ஆகவே விதிகளின்படி சிக்கன நாணய சங்க கடன் பெறுவது தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குரூப் 4 தேர்வு... 2 மற்றும் 3-ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு...! உடனே இதை செய்ய வேண்டும்...!

Sun Dec 24 , 2023
குரூப் 4 பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு எழுத்து தேர்வு கடந்த 24.7.2022 நடைபெற்றது. எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை விவரங்கள் கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. குரூப் 4 பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர், வரிதண்டலர், பண்டக காப்பாளர் மற்றும் தட்டச்சர் போன்ற பதவிகளுக்கான 2-ம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 3-ம் தேதி சென்னை […]

You May Like