திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள மருங்காபுரியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சுரேஷ் (24) லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்த நிலையில் சில நாட்களில் காதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை சுரேஷ் வளர்த்து வந்தார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட சுரேஷ், மாணவியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி சென்ற மாணவி, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அவளது தந்தையும் சகோதரனும் சுரேஷிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர்களிடமும் புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என்று சுரேஷ் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சுரேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.