fbpx

#திருப்பூர்: திருமணம் செய்து கொள்ள கூறிய காதலியை உயிருடன் எரித்துக் கொன்ற காதலன்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-பேத்தாம்பாளையம் சாலையில் பனைபாளையம் பகுதியில் இன்று மாலை உடலில் தீக்காயங்களுடன் இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். 

சிறுமி ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா (19) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண் லோகேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும், இன்று தனிமையில் சந்தித்தபோது, ​​காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். 

காதலன் தன்னை கடுமையாக தாக்கி தீ வைத்து கொளுத்தியதாகவும் கூறியுள்ளார். லோகேஷை போலீசார் கைது செய்த பிறகு, உடல் நிலை சரியில்லை என்று கூறினார். உடனடியாக அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பூஜாவுக்கு 90 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rupa

Next Post

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை தீ வைத்து எரித்து கொன்ற இளைஞர்…! திருப்பூர் அருகே கொடூர சம்பவம்…!

Thu Jan 5 , 2023
தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை கழட்டி விடுவதையே சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் அப்படித்தான் […]

You May Like