மனைவி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை, தான் பின் தொடர விடாமல், பிளாக் செய்து வைத்திருந்ததால், ஆத்திரம் கொண்ட கணவன், பெற்ற குழந்தைகள் கண்முன்னே, தாயின் கழுத்தை நெறித்து, கொடூரமாக, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, வந்தனர். மேலும், அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கம் பூட்டப்பட்டு, தனிப்பட்டதாக இருக்கிறது. அதனை, காவல்துறையினர் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் வெளியானது. அதாவது, கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கும், அவருடைய கணவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
அதோடு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னை பின் தொடர விடாமல் அவருடைய மனைவி அந்த தொழிலதிபரை பிளாக் செய்து வைத்திருந்ததால், கணவன், மனைவி மீது, கடுமையான கோபத்தில் இருந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் காலை, ரேபரேலிக்கு காரில் குடும்பத்தோடு, பயணம் செய்த கணவன், மனைவி இருவரும் திடீரென்று, பூர்வாஞ்சல் விரைவு சாலையில் பிரிந்து இருக்கிறார்கள். அதிகாலை 5 மணி அளவில், சுல்தான்பூரில் இருக்கின்ற முஜேஷ் சந்திப்புக்கு அருகே காரை நிறுத்திய கணவர், தன்னுடைய மனைவியுடன், வாக்குவாதத்தில், ஈடுபட்டதாக தெரிகிறது.
கடைசியாக ஆத்திரம் கொண்ட அவர், தன்னுடைய குழந்தைகளின் கண் முன்னே, தன்னுடைய மனைவியின் கழுத்தை நெறித்து, கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இந்த காட்சியை பார்த்து, அவருடைய குழந்தைகள் கதறி அழ தொடங்கினர் என்றும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு அவர்கள் சென்ற கார் அந்த பகுதியிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இதை அந்த பகுதியில், ரோந்துக்கு சென்ற காவல்துறையினர், பார்த்து, சந்தேகம் அடைந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம், அந்தக் காரில் இருந்த இரண்டு குழந்தைகளும், தங்களுடைய தாயை தந்தை தான், கொலை செய்தார் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.