fbpx

7 நாள்; 6 கொலை.! குடும்பமே காலி.! சொத்துக்காக நண்பன் செய்த துரோகம்.! 4 பேர் கைது.!

தெலுங்கானா மாநிலத்தில் நண்பனின் சொத்துக்காக ஆறு நபர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நிஜமாபாத்தைச் சேர்ந்த பிரசாத் மற்றும் பிரசாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பலரிடமும் கடன் வாங்கி இருக்கிறார் பிரசாத். அவரால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பொருளாதார சிக்கலில் இருந்திருக்கிறார். இந்நிலையில் அவரது உயிர் நண்பன் பிரசாந்த் வீட்டை தன் பெயருக்கு மாற்றினால் வங்கியிலிருந்து கடன் வாங்கித் தருவதாக பிரசாத்திடம் கூறியிருக்கிறார்.

தனது நண்பனின் பேச்சை நம்பிய பிரசாத் தனது வீட்டை நண்பர் பிரசாந்தின் பெயருக்கு மாற்றி இருக்கிறார். இந்நிலையில் நீண்ட நாட்களாகியும் வங்கியிலிருந்து கடன் பெற்று தராததால் வீட்டை தனது பெயருக்கு மாற்றம் செய்யும்படி பிரசாந்திடம் தெரிவித்திருக்கிறார் பிரசாத். இதனைத் தொடர்ந்து நண்பனின் வீட்டை அபகரிக்க நினைத்த பிரசாந்த் தனது நண்பன் பிரசாத்தை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தனது சகோதரர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தனது நண்பன் பிரசாத் அவரது மனைவி ரமா, 2 சகோதரிகள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 6 பேரை 7 நாட்களில் கொலை செய்திருக்கிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரசாந்த் அவரது சகோதரர் மற்றும் 2 நண்பர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Post

"மது வாங்கி கொடுத்து."! சித்தாளை ட்ரம்மில் மூட்டை கட்டிய மேஸ்திரி.! காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!

Thu Dec 21 , 2023
ஆந்திர மாநிலத்தில் கட்டிட வேலைக்கு சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மேஸ்திரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜு. இவரது மனைவி லட்சுமி(57). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜு இறந்துவிட்ட நிலையில் லட்சுமி பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை சேகரித்து விற்பனை […]

You May Like