fbpx

கள்ளக்காதலி கொலை வழக்கு.! 17 ஆண்டுகளுக்குப் பின் பரபரப்பு தீர்ப்பு.!

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிக்கு 21 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொலை குற்றத்திற்காக 14 வருடங்களும் கடத்தி சென்றதற்காக 7 வருடங்களும் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது நண்பர் ராஜேந்திரன். ராஜேந்திரனுக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் நாகராஜனுக்கும் அவரது நண்பரின் மனைவியான செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. சில காலம் கழித்து இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது .

செல்வி நாகராஜை விட்டு விலகிச் செல்ல நினைத்திருக்கிறார். இது நாகராஜிற்கு பிடிக்கவில்லை. இதனால் செல்வியை கொலை செய்ய திட்டமிட்ட அவர் கடத்திச் சென்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் கரையில் வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் இந்தக் கொலை வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது .

திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் கொலையாளிக்கு 21 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறார் நீதிபதி ஸ்ரீ வர்ஷன். இது தொடர்பாக தீர்ப்பை அறிவித்திருக்கும் அவர் கொலை குற்றத்திற்கு 16 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் அந்தப் பெண்ணை கடத்தி வந்ததற்காக 7 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கி இருக்கிறார். மேலும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

Next Post

வீடு, வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் அதிரடியாக உயருகிறது..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Sat Dec 23 , 2023
வீடு, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி […]

You May Like