மூன்றாவதாக திருமணம் செய்த மனைவியை கணவரே கொன்று புதைத்த சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காலடி பகுதியைச் சார்ந்தவர் மகேஷ். இவர் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினருக்கு இவர் மீது சந்தேகம் வரவே இவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகிருக்கின்றது. மகேஷ் தனது மனைவி ரத்னவள்ளி உடனான உறவை முறித்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அவரது மனைவிக்கும் சேலத்தைச் சார்ந்த முத்து என்பவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் அவரது மனைவியை கொன்று இறந்த பின்பு அவருடன் உடலுறவு கொண்டு விட்டு பின்னர் மனைவியின் உடலை புதைத்து விட்டு காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். இதனை அடுத்து காவல்துறை அவரது மனைவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகிறது.