தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. முகக் கவசம் அணிவதால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டி அந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞருக்கும் உயர்நீதிமன்றம் அபராதம் விதித்தது. வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் 10000 ரூபாய் அபராதம் விதித்தது.

ஜூலை மாதம் சென்னையில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தாக்கல் செய்தார். தனது மனுவில் முகக்கவசம் அணிவதால் பாதகமான விளைவுகள் ஏற்படுவதாகவும், அதனால் மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை சரியாகப் பெற முடியாது என்றும் கூறினார். மேலும் மனுதாரர், தனது பொதுநல மனுவில், ஜனவரி 12 அன்று மாநில சுகாதாரத் துறை பிறப்பித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெரு சென்னை மாநகராட்சியால் மற்றொரு உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.. இந்த விதியை எதிர்த்து வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியில்மனுவை நிராகரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு 10000 ரூபாய் அபராதம் விதித்தது.